பக்கம்:வீர காவியம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

போர்ப் படலம்


இயல் 97 கோளரியை மாவேழன் வியந்து நிற்கக் கொடு விற்போர் புரிகவென அழைத்தான் காளை. 'பார்முழுதுங் களங்கண்டேன் வென்று வந்தேன் பலரோடும் பொருதிருந்தேன்; அடஒ இந்தப் போர்முனையில் நேர்பொருதும் முறுவற் காளை போலொருவர் கண்டதிலே இன்று காறும்; வார்முரசம் அதிர்களத்தில் அஞ்சா வீரன் வாள்வலியும் தோள்வலியும் சிறக்கக் கண்டேன்; வேர்வையுறும் முகப்பொலிவும் என்னே!' என்று வேழன் தன் மனத்தகத்துள் வியந்து நின்ரு ன். 407 விரல்கொண்டு துதல்வியர்வை துடைத்துக் காளை வேறுபெயர் கொண்டுடன்ற அவனை நோக்கி, விறலுண்டோ மறுமுறையும் முறுக்கு தற்கு? வீரவுளங் கொண்டனையேல் இனிநி கழ்த்தும் உறங்கொண்ட பெரும்போரில் வில்லை ஏந்தி உனதாண்மை காட்டுகநீ! இன்றேல் தோற்றுப் புறந்தந்தாய் என்பதற்கோர் இசைவு காட்டு! போர்மறவ! விரைந்தொன்று புகல்க' என்ருன். 408 (ք Այl வல்-புன்னா , טה ת, ומו - நெற்றி *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/208&oldid=911389" இலிருந்து மீள்விக்கப்பட்டது