பக்கம்:வீர காவியம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

208


இயல் 99 எறிதண்டு தாக்குறவே நிலைத்தான் வேழன் இன்றுபோய் நாளைவா என்ருன் காளே. இனிமுடிவு காணுதலே இனிதென் றெண்ணி எழுமுணர்விற் கோளரியன் தண்டெ டுத்துத் தனிவலிவு கொண்டதனைச் சுழற்றி, அங்குத் தருக்கிவரும் வேழன்றன் தலையை நோக்கி முனிவுகொடு குறிதவரு தோங்கி வீச முழுவலியன் தடுக்குமுனம் தாக்கிற் ருங்கே நனிவிழுந்த அடிதாங்க இயலா கிை நடுமரம்போல் நிலைத்துவிட்டான் தோலா வேழன்.412 வெற்றிக்கே முழுவுரிமை பேசி வந்த வீரத்தின் குலமகனே! நிலைத்து நின்ற பெற்றிக்குக் காரணமென்? போது மென்ற பெருமனமோ? அடிபட்ட நானந் தானே? முற்றுற்ற கோபுரமே! செங்க லுக்கு முன்னிற்க மனமிலையோ? வீர மெல்லாம் வெற்றுக்குப் பயன்படுத்த வேண்டா என்று விழைந்தனையோ? முதுமகனே எண்ண மென்ன? 413 முனிவு- கோபம் பெற்றி - தன்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/211&oldid=911397" இலிருந்து மீள்விக்கப்பட்டது