பக்கம்:வீர காவியம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

212


"புகுகின்ற களமெல்லாம் வாகை கொண்டேன் புகழ்நிறுவ அவைதாமே சாலும் சாலும்; மிகுகின்ற வலியுடைய வீர னேனும் மேலொருநாள் இவ்வுலகில் மாய்தல் திண்ணம்; நகுகின்ற சாவினைத்தான் தடுக்க வல்லார் நானிலத்தில் எவருமிலர்; என்னை விஞ்சிப் புகுகின்ற அன்புணர்வோ ஏதோ ஒன்று புரியாமல் என்னுளத்தை அலைக்கக் கண்டேன்'. 420 என்றுழலும் நெஞ்சினணுய் வேழன், தன்னே டிணைந்துவரும் ஒருமறவற் கூவி நாளை நின்றுபுரி சமர் தன்னில் படையைக் கூட்டி நிரல்நிறுத்து! நான்வெற்றி கொள்வே யிைன் துன்றிவரும் மகிழ்ச்சியினுல் இன்பக் கண்ணிர் துளிக்கட்டும்; வீழ்ந்துபட நேரு மாயின் கன்றிவரும் புனல்விழியர் நிற்போர் தம்மைக் கடுகிஅழைத் தேகுகநம் நாட்டுக் கென்ருன். 421 in a நிரல்-வரிசைப்பட புளல்-(கண்) நீர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/215&oldid=911404" இலிருந்து மீள்விக்கப்பட்டது