பக்கம்:வீர காவியம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

போர்ப் படலம்


பொத்தெனவே மணற்பரப்பில் வீழ்ந்தான் வேழன்; புலிப்போத்துப் போலிளவல் பாய்ந்து சென்று கத்துகுரல் யானையின் மேற் சிங்கம் என்னக் கடுங்கண்ணன்"அகலத்தில் அமர்ந்து கொண்டு குத்து டைவாள் தனை எடுத்துக் கையை ஒச்சக் கொலைபுரியேல்! பொறுமகனே! ஒருகால் தோற்பின் எய்த்தவனை விடுவதன் றிக் கொன் ருெ ழித்தல் எம்நாட்டின் விதியன்று; தெரிந்தா யல்லை! 430 மறுமுறையும் தோற்பவரே இறத்தல் வேண்டும் மதித்திதனை எனைவிடுப்பாய் மகனே' என்ருன்; உருகுமுளங் கொளுமிளைஞன் முதியன் சொல்லை உண்மை என நம்பியதாற் கொலேவி டுத்தான்; கருணை மறங் கொண்டவர்க்குக் கடமை யீதாம்; காளையிவன் தோற்றவனைச் செலவி டுத்தான்; 'மருவியுள முதுமைக்கும் சொற்கும் இன்றே மதிப்பளித்தேன் போ.நாளை வா வென் ருளுல் 431 அகலம்-மார்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/220&oldid=911416" இலிருந்து மீள்விக்கப்பட்டது