பக்கம்:வீர காவியம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

224


இயல் 1 10 எ?னப்பெற்ற மாவேழன் அறிந்தால் நின்னை சர்ந்தெறிவன் தப்பிவிடு என்ரு ன் காளை. 'நயவஞ்சப் பேருருவே! பொய்ம்மை ஒன்றே நாடுகின்ற கிழப்புலியே! நேற்று ரைத்துப் பயனடைந்த விதி எங்கே? ஓடி யின்று பதுங்கியதோ? தனக்கொன்றும் மற்ருேர்க் கொன்றும் செயவந்த விதிமுறையோ உனது நாட்டில்? செய்யாத செயல்செய்தாய்! வீரம் ஈதோ? கயமுவந்து பழிபுரிந்தாய் தந்தை பேரைக் கழறினை நீ! நான்மலைத்தேன் வீழ்த்தி விட்டாய் 444 எனப்பெற்ற தந்தையை நான் தேடித் தேடி இளைத்திருந்தும் உயிர்விட்டுங் காண கில்லேன்; முனைப்புற்ற மாவீர! என்னைக் கொன்ற மொழிகேட்பின் மாவேழன் எனக்குத் தந்தை நினைச்செற்றுத் தொலைத்தழித்தே அமைவன்; இன்றே நிற்கின்ற களம்விட்டுத் தப்பி ஓடு! சினப்புற்ருன் முனைந்தெழுமேல் பாத லத்துச் சென்றுறினும் விட்டுவிடான் வந்தே கொல்லும். 445 கயம் - கீழ்மை. சினப்பு - கோபம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/227&oldid=911430" இலிருந்து மீள்விக்கப்பட்டது