பக்கம்:வீர காவியம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

போர்ப் படலம்


இயல் 1 11 நினைப்பெற்ருேன் மாவேழன் என்ப தற்கு நிகழ்த்துமொரு சான்றுண்டா? என்ருன் வேழன். ஏந்தலுரை கேட்டிருந்த வேழன், நிற்கு யார் தந்தை? யார் தந்தை? மொழிக’ என்ன, வேந்தரெலாம் பேர்கேட்டு நடுங்க நின்ற வீரமகன் மாவேழன், தந்தை' என்ருன்: 'சாந்துணையில் வருமகனே! வேழன் பெற்ற தனிமகவு பெண்மகளே' என்ருன் வேழன்; 'ஏந்தெழிலி எனையின்ருள் வேல்வி ழிக்கோர் இளவலன்றிப் பிறிதொருபெண் இல்லை' என்ருன். 446 என்றமொழி ஈட்டிஎன நெஞ்சில் தைக்க, 'என் செய்தேன் ஐயாவோ! பாவி நானே கொன்றுவிட வாளெடுத்துப் பாய்ச்சி விட்டேன்; கொடுமையிது கொடுமையிது!’ என்ற ரற்றி, நின்றஇரு கால்கள் தடு மாறக் கண்கள் நிலைசுழல உலகனைத்தும் சுழலல் போலக் குன்றனைய மாவேழன் மயக்க முற்றுக் குமுறிவரும் விழிப்புனலத் துடைத்து நின்று, 447

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/228&oldid=911432" இலிருந்து மீள்விக்கப்பட்டது