பக்கம்:வீர காவியம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வீரகாவியம்
20
இயல் 6

மாவேழன் ஏறிவந்த பரிமா தன்னை
வயந்தநகர்ப் பெருவீரர் கவர்ந்து சென்றார்.

வயந்தநகர்ப் பெருவீரர் சிலர்தாம் கூடி
      மலைச்சரிவின் நெறியிடையே வருவோர் ஆண்டு
வயங்கெழுமும் ஒருபரிமான் கலனை யின்றி
      வாய்பற்றுங் கடிவாளக் கட்டு மின்றி
நயந்துபசும் புன்மேய்ந்து திரியக் கண்டார்;
      நல்லியல்சேர் இவுளியதன் தோற்றங் கண்டு
மயங்கினராய்க் கவர்ந்துசெலக் கயிறு வீசி
      மடக்கினர்அம் மாமடங்கல் மடங்க வில்லை.19

திடங்காணும் அம்மறவர் திரண்டு நின்று
      திறமுழுதும் பயன்படுத்தி முயன்றா ரேனும்
அடங்காது தப்பியது வேழன் பாய்மா;
      ஆசைமனம் அடங்காமல் எழுந்து விட்டால்
படும்பாடு படுவரன்றி விட்டார் யாரே?
      பாய்புரவி பற்றுதற்கே முனைந்து நின்றார்;
கடன்காரன் இரக்கமிலார் நடுவில் நின்று
      கலங்குதல்போல் அப்பரிமான் கலங்கக் கண்டார்.20


வயம்–வெற்றி, கலனை – சேணம். இவுளி–குதிரை.
மாமடங்கல் –சிங்கம் போன்ற குதிரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/23&oldid=911438" இருந்து மீள்விக்கப்பட்டது