பக்கம்:வீர காவியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரகாவியம்

22

இயல் 7

மாவேழன் மனமுடைந்து பகைவர் நாடாம்
வயந்தநகர் தனிற்புகுந்தான் பரிமா வின்றி.

களைத்துறங்கும் பெருவீரன் கண்வி ழித்தான்;
      கடுநடைய புரவிதனைக் காணா தங்கு
விளித்ததன்றன் பெயர்கூறிக் கூவி நின்றான்;
      விடையொன்றுங் கேட்டிலனால்; உரத்து மீண்டும்
உளைப்பரிமா தனைப்பலகால் அழைத்தா னாக,
      ஒருகுறிப்பும் காலடியின் ஒலிப்பும் கேளான்;
தளைப்பறியா மறப்புரவி அடிச்சு வட்டின்
      தடம்பற்றி நடந்தப்பால் தேடிச் சென்றான். 23

ஒருமுறைநான் அழைப்பினுமென் குரலைக் கேட்டே
      ஓடோடி என்பால்வந் தருகில் நிற்கும்
அரும்புரவி யாங்குளதோ எனவ ருந்தி
      அந்நெறியே ஏகுமவன் வழியின் நாப்பண்
மருவுபரி அடிக்குளம்பும் வளைத்து நின்ற
      மாந்தர்தம தடிச்சுவடும் துதைந்து தோன்ற,
மருவலர்தாம் கவர்ந்தனரென் றெண்ணி நெஞ்சம்
      வருந்தினனாய்ச் சுவடுபடும் நெறியிற் சென்றான். 24


தளைப்பு -கட்டு, துதைந்து - நெருங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/25&oldid=911476" இலிருந்து மீள்விக்கப்பட்டது