35
காட்சிப் படலம்
மாவேழன் உற்றபெருஞ் சோர்வு கண்டு
வயத்தரசன் நற்றுணையாய்த் தேற்றி நின்றான்.
நெடும்புலத்தைச் சூழ்ந்திருந்த கங்குற் போது
நீங்கினுமவ் வெவ்வேலான் நெஞ்சந் தன்னைத்
தொடும்பருவ உணர்ச்சியது விலக வில்லை;
துயர்ப்படுத்தி இரவெல்லாம் கதிர்கள் வீசிச்
சுடும்நிலவு வானத்தின் அகன்ற போதும்
துயிலறையில் மயிலனையாள் வந்து தோன்றிக்
கொடுந்துயருள் அவன்மூழ்கக் காட்டிச் சென்ற
கோலமுகம் மனத்தினின்றும் அகல வில்லை.50
போராடிப் போராடிப் புறமே கண்டோன்
புதியதொரு போர்க்களத்தை அகத்தே கண்டு,
போராடிக் களைத்துவிட்டான்; ஆற்ற லெல்லாம்
போய்மடியத் தனித்திருந்தான்; பின்னர்க் காலை
நீராடிக் கடன்முடித்துத் திருவோ லக்கம்
நிகழரங்கம் சென்றிருந்தான்; அரச னோடும்
சீராடிப் பயிலவரும் செல்வ ரோடும்
சிரிப்போடு சொல்லாடி மகிழ வில்லை.51
கங்குல்-இரவு, திருவோலக்கம்-அரசவை