பக்கம்:வீர காவியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 காட்சிப் படலம்


இயல் 19 வெறுப்பெதற்குத் திருமணத்தில் என்ருன் வேழன் வீரனுக்குக் காதலியம் என்ருள் தோழி. 'திருமணமே கூடாதென் றேன்.வெ றுத்தாள்? சீரிளமைப் பேரெழிலைப் பாழ்ப டுத்தத் திருமகள்தான் ஏன் நினைத்தாள்? தேனும் பாலும் தெருமண்ணில் சிந்திவிட நினைவா ருண்டோ? தரு 5 التي تكلم நறுமணமார் ஒருமலரைக் கசக்கி வீகம் நல்லவரைக் கண்டதிலே; பேதை என்னும் ஒருபெயரை நிலைநாட்டப் பேதுற். ருள் கொல்? உலகியலுக் கொவ்வாத செயல் மேற் கொண்டாள்.'67 திகைத்தவனில் வணமுரைக்கத் தேனும் பாலும் தெய்வவழி பாட்டுக்கே வைத்தாள் ஐய! முகைத்துவிரி மலர்தன்னைக் கசக்க வில்லை முனம் விழைந்த பூசைக்கே பேணிக் காத்தாள்; நகைத்தவளைப் பேதை என நவிலல் நன்ருே? நலமிகுந்த பெண்மைக்கோர் சான்ருய் நின்றே அகப்பொருளின் உயர்பண்பைப் போற்றிக் காக்க ஐம்புலனுக் காளாகா திருந்தாள்' என்ருள். 68 முகைத்து- மொட்டாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/46&oldid=911523" இலிருந்து மீள்விக்கப்பட்டது