பக்கம்:வீர காவியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 காட்சிப் படலம்


இயல் 20 இளவரசி மனங்கவர்ந்த வீரன் இந்த வேழன்தான் என மொழிந்தாள்; அவன்ம கிழ்ந்தான். 'மங்கையவள் மனக்கோயிற் றெய்வ மான மாவீரன் யாவனவன்? மன்றல் கொள்ள இங்கவன்போற் பேருடை யான் ஒருவ னில்லை; று) ஏங்குதற்குப் பிறந்தவரை ஏங்க விட்டாள்; பொங்கிவரும் எழிலுருவப் பூவை நெஞ்சுட் புகுந்தவளுேர் நிகரில்லா வீரன் என்ருய்! எங்குளனுே அவ்விளைஞன்? போரில் என்றன் எதிர்நிற்கும் நெஞ்சினனே? மொழிக' என்ருன். 72 ஒருநாளும் தோல்வியவன் கண்ட தில்லை; உருத்தெழுந்தோர் நெடுநேரம் நின்ற தில்லை; வெருவாத மன்னரிலே அவன்பேர் கேட்டால்; வெற்றிமகள் அம்மறவன் தோளே வேட்டாள்; மருவாரைப் புறங்கண்ட விர னேனும் மாதரசி ஒருத்திக்குத் தோற்று விட்டான்; பெருவாளை வயல் தாவும் மூவ கத்துப் பெருநாடே அவன் நாடாம் எனமொ ழிந்தாள். 73 வேட்டாள்-விரும்பினுள், மருவார் - பகைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/48&oldid=911527" இலிருந்து மீள்விக்கப்பட்டது