பக்கம்:வீர காவியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 46


என்றமொழி செவிபுகுதா முன்னர் விரன் இருவிழியும் சிவந்தெழுந்தான் 'என்றன் நாட்டில் வென்றியல தொன்றறித லின்றி எங்கும் விஞ்சுபுகழ் கொண்டுவரு மென்னை வெல்லும் வன்றிறலன் இன்றுளனுே? என்றன் வாளின் வாய்மழுங்கிப் பொன்றியதோ? அவன்பேர் கூருய்! நின்றன்முனம் கொன்றுடலேக் கிழிப்பன் கூருய்! நிலைகுலைய வீரத்தின் ஆணை’ என்ருன். 74 'மூவகத்துப் பெருநாட்டின் வீரன் என்ருய் மொய்குழலி! கா தலைநான் இழந்து விட்டுப் போவதற்கு மனமிசைவேன்; என்றன் வீரம் புல்துணியின் அளவேனும் குறைவ தென்ருல் சாவதற்கும் நான் தயங்கேன்; என்னின் மிக்க தறுகணன்யார்? யாதவன் பேர்? நொடியிற் கூறு; பூவகத்து வாழ்வானை விண்ண கத்துப் போய்ப்புகுதச் செய்வித்து மீள்வேன்' என்ருன், 75 "அப்பெயரை நின் முன்பு கூறல் நன் ருே? அஞ்சுகின்றேன்; பெண் மைக்கு முறையு மன்று; தப்பெனவே உலகுரைக்கும்; மேலும் நீதான் தரியலர்க்குக் கூற்ருவாய் உண்மை; ஆளுல் ஒப்பரிய இளவரசி உளங்க வர்ந்த ஒருவனநீ என்செய்ய இயலும்?' என்ருள்; 'செப்புகஅப் பெயரென்ருல் ஏதே தோநீ - ూ _ 輯 f ¡ H * 距 * செப்புகின்ருய்' என இடிபோல் முழங்கி நின்ருன். 76 _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/49&oldid=911529" இலிருந்து மீள்விக்கப்பட்டது