பக்கம்:வீர காவியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 காட்சிப் படலம்


'உரைத்தமொழி திரித்துணர்ந்தாய் அதனுல் நெஞ்சம் உழலுதியால்; புலம்புதியால்; பேதாய்! காதல் ஒருத்தியுனை விழைவதிலே மாற்ற மொன்றும் உயர்வேழற் கிலேயென்றேன்; முன்பே நெஞ்சில் பொருத்தியுனை நினைந்திரங்கிக் கவல்கின் ருளுல் போயொருசொல் புகன்றிடவாய்ப் பில்லை என்றேன்; அருத்தி மிகு காதலினுல் நின்னைக் காணும் ஆவலிகுல் துடிக்கின் ருன் வீரன்' என்ருள். 85 வாடுகின்ற உயிராட்குத் தோழி சொன்ன வாய்மொழிகள் அமு தாகி உடல்சி லிர்க்க மாடுநின்ற தோழியினைத் திணறும் வண்ணம் மகிழ்ச்சியினுல் அனைத்திறுகக் கட்டிக் கொண்டாள்; பாடுகின்ற குயிலாளுள், விரித்த தோகைப் பச்சைமயில் அவளாளுள், வெற்றி வாகை சூடுகின்ற வீரனுக்குத் துணையே ஆளுள்; து மலரின் பஞ்சனை வீழ் கொடிபோல் ஆளுள். 86 வீழ்ந்தவளப் பஞ்சணையுட் புரண்டாள், ஆடை விலகுவதும் உணராமல் உருண்டாள், வண்ணம் சூழ்ந்த தலை யனையுள்முகம் புதைத் தாள், மீண்டும் தோகைஎழுந் தாடியின் முன் நகைத்தாள், நின்று தாழ்ந்தவிழ்ந்து சரிகுழலே முடித்தாள், நெற்றி தரித்த நறுந் திலகத்தை வடித்தாள், தோளின் வீழ்ந்தொதுங்கும் ஆடையினைத் திருத்தி நெஞ்சம் விம்மவரும் மகிழ்ச்சியினுல் சிரித்து வந்தாள். 87 அருத்தி -ஆசை மாடு-பக்கம். வடித்தா ள்-ஒழுங்குசெய்தாள் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/54&oldid=911543" இலிருந்து மீள்விக்கப்பட்டது