பக்கம்:வீர காவியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 54


இயல் 24 மா?லப் பொழுதின் வருகை நோக்கி ஏனைப் பொழுதை இகழ்ந்தனள் வேல்விழி. 'கடையாமம் வருமுன்பே என்பொ. ருட்டால் கதிர்காட்டி விடிந்துவிடிற் குறைந்தா போகும்! படையாகத் தென்றலுடன் வாடை வந்து படுத்துவதேன்? மெல்லியலார்க் கிரங்கும் நெஞ்சம் கிடையாதோ இக்கொடிய பாவி கட்கு? கேளின்றித் தனித்துழலும் ஒருத்தி யின்பால் இடையறவே ஒருசிறிதும் இல்லை யாக இடர்தரின்யான் என் செய்வல்?’ என்று ழன்ருள். 92 கொடுமிரவுக் கெத்துனைதான் வலிய நெஞ்சம்; கொல்வதெனக் கொண்டதுவோ கொடிய வஞ்சம்; விடிவதற்கு மனமின்றி நிலைத்து நிற்கும்; வெண்ணிலவின் துணைகொண்டு கனலைக் கக்கும்; சுடுகதிரோற் கென்னகுறை செய்து விட்டேன்! துங்கமுகங் காட்டாமல் துாங்கு கின்ருன்! கடுகிவரும் நினைவிலளுே? கருணை யில்லான் கடமையினை மறந்தனனே? வெய்யோன்' என்ருள். 93 கேள்-துணை வன். வெய்யோன்-கதிரவன் கொடியவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/57&oldid=911549" இலிருந்து மீள்விக்கப்பட்டது