பக்கம்:வீர காவியம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 காட்சிப் படலம்


புகழுரையும் இகழுரையும் உலக மாந்தர் புகல்வன தாம் பொருளுரையோ மேல வர்க்கு? தக வுடையர் அவ்வெல்லாம் மனத் துட் கொள்ளார் தம்பணியைக் காலத்தில் ஆற்றிச் செல்வர்: பகலவ னும் வேல்விழியாள் நொந்து ரைத்த பழிமொழிக்குச் செவிகொடுத்தல் இலய்ைச் சேந்து தகதகவென் ருெளிர்ந்தெழுந்து கடமை யாற்றத் தங்கமயம் ஆக்குகிருன் கிழக்கு வானே. 94 வான் வெளியிற் செந்நிறத்தைப் பகலோன் பூசி வையத்தில் ஒளிபரப்பத் திகழ்ந்து வந்தான்: தான் விழையும் காதலனும் தனது வாழ்வைத் தங்கமய மாக்கிஒளி யூட்டும் என்ற தேன் வழியும் நினைவதனுள் மூழ்கி மூழ்கித் திருமகளும் பஞ்சனே விட் டகன்று போந்து, மான் வளையும் தோட்ட த்துப் பொய்கை யாடி மலர் சூடி விளையாடி மகிழ்ந்து வந்தாள். 95

  • A, n லைஎனும் பொழுதகன்று போன பின்னர்க் கடும்பகலும் நெடிதகன்ற பின்ன ரன்ருே மாலைஎனும் பொழுதுவரும்! இவ்வி ரண்டும் மனமிாங்கித் தொலையாவே! நின்றி ருக்க வேலைஒன்றும் இல்லெனினும் மாறி மாறி

வினையியற்ற வல்லனபோல் நிலைத்து நிற்கும்; மாலையுளங் கொண்டமையால் கலங்கும் மங்கை மனம்வெம்பிப் பொழுதெல்லாம் வைது நின்ருள். 96 == = - o =婴 _ * o சேந்து சிவந்து மால-மயககததை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/58&oldid=911551" இருந்து மீள்விக்கப்பட்டது