இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம் 56
இயல் 25
காதலர் நெஞ்சம் களிப்புறச் செய்யும் போதலர் மாலைப் பொழுதும் வந்தது.
கருத்தொருமை கொண்டிருவர் தம்முட் கூடிக்
கலந்துளத்தைப் பரிமாறுந் தலைக்கூட டத்திற் குருக்கமுடன் துடித்திருக்கும் பொழுதில், நாமேன்
ஊருக நின்றிருக்க வேண்டு மென்று கருத்த தனிற் செய்யவனும் நினைத்தான் போலக்
கடுகிவிரைந் தோங்குமலைத் தொடர்ப்பு றத்தே உருக்கரந்து கதிர்சுருக்கி மறைந்து விட்டான் ;
உலகியலின் திறமுணர்ந்தோர் செயலே செய்தான். 97
களவியலில் பயின்றுவரும் காத லர் க்குக்
காலமெலாந் துணைநிற்கும் மாலைக் காலம், உளவியலை நன்குணர்ந்தோன் செய்கை போல உணர்ச்சியினல் ஒன்றுபடும் இருவர் தம்முட் பழகிடவந் துதவியது. மயங்கும் அந்தி பாரெங்கும் பரவியது; காமுற் ருரின் இளமையுளம் சிறகடித்துப் பறந்து செல்ல
இறகொடுக்கி அடங்கினவே புள்ளி னங்கள். 98