பக்கம்:வீர காவியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 58


கைம் மலராற் பற்றியுள தாம ரைப்பூக் கா எண் பவரை மயக்குறுத்தும் வண்ணம் சிற்பி செய்ம்முறையை என்னென் பேன்! சிலையின் வாயில் - = +. 표 다. = H o + | சிவப் பூட்டிச் செய்த இதழ் அடஒ விந்தை! பொய்ம்மையிலை உயிருடைய பெண்ணே என்று புகன் றிடுவர் நோக்குநர் தாம்; தொட்டு ணர்ந்தே மெய்ம்மையினை உணர்ந்திடுவர்; இதனைச் செய்தான் மேன் மையினை எவ்வண் ணம் புகழ்ந்து ரைப்பேன்? 101 ம. லைவரும் எனவுரைத்த குறியி டத்தில் மன்னவன்றன் குலக்கொழுந்தைக் காண வில்லை; பாலைநிகர் மொழியுடையாள் வாரா தேகின் பாலைநிகர் வாழ்வாகும் என்றன் வாழ்வு! மாலையவள் நிற்பளெனச் சொன் னுள் தோழி மயக்குறுத்தும் சிலையைத் தான் மொழிந்தாள் போலும்! மாலைஎனைச் சூட்டுவளென் றெண்ணி நின்றேன் மாலை எனக் குண்டாக்கி நின்று விட்டாள் !! 102 எனப்புலம்பும் ஏறனையான் நிலைமை கண்ட இளவரசி நகை த்துவிடத் திகைத்தான் வீரன்; மனக்குழப்பம் மிகவாகிச் சிலைசி ரித்த வகையென்ன எனும் வியப்பால் உற்று நோக்கித் தனக்குவந்த மயக்குக்கு நாணி விட்டான்: தையலிவள் மையல் தரும் சிலைபோல் நின்ருள் எனக்கலங்கிப் பினர்த்தெளிந்து நெருங்கிச் சென்ருன்: இறும்பூது கொண்டுயிர்த்து நிலைத்து நின்ருன். 103 இறும்பூது-விய ப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/61&oldid=911558" இலிருந்து மீள்விக்கப்பட்டது