பக்கம்:வீர காவியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
61

காட்சிப் படலம்


'பித்தரெனக் கலங்கி.மனம் மாறி மாறிப் பேசுவதேன்? நகைமொழியோ? குறும்புச் சொல்லோ? நத்துவதை உரைக்காமல் தடுமாற் றத்தால் நடுங்குவதேன்? பேதையர் பால் வீரர் காட்டும் வித்தையிதோ? வேண்டுவதை உறுதி செய்து விளம்புதியேல் தடையில்லை தருதற் கென் ருள்; புத்தமுத மொழியிதனைச் செவியிற் கேட்டுப் பூரித்தான் அம்மொழியால் மயங்கி விட்டான். 109 'பித்தத்தின் வேகந்தான் பேசு கின்றேன்; பேதையுண் தெழிலுருவைக் கண்ட பின்பே சித்தத்தின் நிலைகலங்கிச் செயல்க லங்கித் தெரிவையுனை நினைந்திரங்கி மயங்கி நின்றேன்; முத்தமிழின் சுவையனைத்தும் நின்வாய்ச் சொல்லில் முகிழ்த்துவரக் காணுவதால் தெளிவுங் கொண்டேன்; நத்துவதிப் பூங்கொடியே வேருென் றில்லை நல்குதியேல் வானுலகும் வேண்டேன்' என்ருன்.. 110 'ஈவாருங் கொள்வாரும் இங்கே யில்லை உரிமைதனைக் கொள்வற்கோர் தடையு மில்லை; பூவாருங் கொடிக்குரியை நீயே என்று பூண்டுள்ளேன் ஓருறுதி; கண்ட ஞான்றே நீவேறு நான் வேறென் றெண்ண வில்லை நீங்கியது நானெனதென் றெண்ண மன்றே! கூவாத குயிலொன்று கூவக் கண்டேன் குழைவாக மனமின்று குளிரக் கண்டேன். 111 _ நத்துவது - விரும்புவது. பூ.ஆரும் --- பூ நிறைந்த ஞான்று - பொழுது,நத்துவது - விரும்புவது. பூ ஆரும் - பூ நிறைந்த ஞான்று - பொழுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/64&oldid=911564" இலிருந்து மீள்விக்கப்பட்டது