உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீர காவியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 காட்சிப் படலம்


இயல் 28 தந்தையிடம் இசைவுபெற முடிவு செய்து தணியாத காதலொடு பிரிந்து சென்ருர். புலரட்டும் முடிவொன்று காண்பேன்' என்று புலியனையான் புகன்றமொழி கேட்டுப் பூவை 'மலரட்டும் மனமுரசம் என்ப தல்லால் மருவட்டும் போர்முரசென் றுரைத்தல் நன்ருே? பலரட்டுக் குவிப்பதிலா மணநாள் வேண்டும்? பற்றிருக்க உறவிருக்கப் பரிவி ருக்க மலரொட்டும் மனமாலை சூடி நிற்க வழியிருக்க அதைவிடுத்துப் பகையா வேண்டும்? 115 போருக்கு முனைந்துவிடின் ஒருபால் தந்தை! புலியனைய காதலன் நீ மறுபால் நிற்பை! யாருக்கோ இழப்பென்று நினைத்தாய் போலும்! எனக் கதிலோர் மனநினைவா மகிழ்வா தோன்றும்? ஊருக்கும் பழிப்பாகும்; அதனுல் நானே உயிர்த்தோழி துணை கொண்டு தந்தை யின்பால் நேருக்கு நேருரைத்து மணமு டிக்க நேயமுடன் இசைவுபெற முயல்வேன்' என்ருள். 116 அட்டு-கொ :ன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/66&oldid=911567" இலிருந்து மீள்விக்கப்பட்டது