பக்கம்:வீர காவியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நன்றியுரை

கோபிச்செட்டிப் பாளையத்தைச் சார்ந்த பாரியூர் நஞ்சக் கவுண்டன் பாளையத்து நல்லாக் கவுண்டர் இல்லத்திலிருந்து 7-6-1966-இல் இந்நூலை எழுதி முடித்தேன். அவ்வமயம் அவர்தம் துணைவியாராகிய வணக்கத்திற்குரிய வேலம்மாள் அவர்கள் காட்டிய தாயன்பும் துணைபல புரிந்த மக்களின் பேரன்பும் என்றும் நினைவுகூரத் தக்கன.

இந்நூலை அச்சிட்டு வெளிக்கொணர்ந்த என் தந்தைக்கு நிகராய அண்ணல் சுப்பிரமணியனார் அவர்கட்குயான் என்றும் உரியேன்.

நூல் அச்சேறுங்கால் அனைத்து வகையானும் துணைபுரிந்த என் இளவல்மார் புலவர் ஆ.பழநி, புலவர் முத்துசம்பந்தன் இருவர்மாட்டும் நன்றி கலந்த அன்பினேன்.

காரைக்குடி
அக்டோபர், 1970
அன்புள்ள,
முடியரசன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/7&oldid=911575" இலிருந்து மீள்விக்கப்பட்டது