உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீர காவியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 திருமணப் படலம்


'கலக்கத்தாற் குழம் புமென விளங்கக் கூறிக் கனிமொழியால் தெளிவுறுத்த முனை த லின்றி, இலக்கணத்தாற் குழப்புகின் ருய்! புரிந்து கொள்ள இந்நிலையில் இயலுவதோ?’ என்ருள் செல்வி; 'குலக்கொழுந்தே! உயிரிரண்டு கூடுங் காலைக் கூட்டுவிக்கும் உடன்படுமெய் போல உங்கள் இலக்குடைய உயிரிாண்டைக் கூட்டு விக்கும் எழில்மணத்தை அப்பெயராற் குறித்தேன்’ என்ருள். 2. れつつ புணர்ச்சிக்கு விதி சொல்ல வல்லாய்! எங்கள் புணரியற்கும் வித செய்ய வேண்டும்; தந்தை உணர்ச்சிக்கு வயமாகி மறுக்கா வண்ணம், உரைக்குமுறை யாலுரைத்து, வீரனுக்கே இணர்த்தொடையல் நான்குட்டி மணமே கொள்ள, இசைவிப்பாய்; என்னுயிர் நின் கையிற் றந்தேன்; துணர்க்கொடியின் இடையுடையாய்! து துசென்று துணை தருமோர் மங்கலச்சொற் கொணர்க' என்ருள். s* キ உடன்படுமெய்-இரண்டு உயிரைச் சேர்த்துவைக்கும் மெய்யெழுத்து, புணர்ச்சி இலக்கணப்புணர்ச்சி புணரியல்-தலைவன் தலைவியர் கூட்டம். இணர்த்தொடையல்-பூங்கொத்து மாலை துணர்-பூங்கொத்து. 1. * - -- o - "... - "- o ***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/72&oldid=911581" இலிருந்து மீள்விக்கப்பட்டது