பக்கம்:வீர காவியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 70


இயல் 31 வேந்தன்பால் துாதுரைக்கச் சென்ற தோழி வேல்விழிக்கு மணமுடிக்க வேண்டி நின்ருள். மாதுக்குத் தந்தைவயத் தரசன் பாங்கர் மாவேழன் வேல்விழியின் மனமு டிக்கத் துாதுக்கு நேர்ந்துசெலும் தோழி, மன்னன் துய்யமணி மண்டபத்தில் தனித்தி ருக்கும் போதுக்கு வந்தெதிரே தொழுது நின் ருள்; புன்னகையால் வாழ்த்தியவன் அவளை நோக்கி, 'யாதுக்கு வந்தனை நீ? நின்னு ளத்தில், என்விழைந்தாய்? விளம்புதியேற் பெற்ருய்' என்ருன். & ሥ ጐ 'உரை பிறழாச் செங்கோன்மை உடையோய்! என்றன் உள்ளத்தை உரையா முன் பெற்ருய் என்ருய்; கரையறியாப் பேருவகை நெஞ்சிற் பாயக் காண்கின்றேன் என் கருத்து முற்றிற் றென்றே; விரைபிரியா மலர்பூத்துக் குலுங்கும் முல்லை வியன்கொடிதான் படரஒரு கொழுகொம் பின்றித் தரைதனிலே கிடந்திடுமேல் வளர்ச்சி யுண்டோ? தவித்திருக்கக் காண்பதுதான் நமக்கும் நன்ருே? 126 விரை-மணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/73&oldid=911583" இலிருந்து மீள்விக்கப்பட்டது