பக்கம்:வீர காவியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 72


"தந்தையினும் பரிவுடையோய்! மாலை சூடத் தவிக்குநிலை எனக்கில்லை; குலம் த ழைக்க வந்தவளை வேல்விழியை அவள்வி ழைந்த வாள் வீரன் ஒருவனுக்கு பண மு டிக்கச் சிந்தையினில் நான் விழைந்தே வேண்டி நின்றேன்: சிறிய வளென் வேண்டு த லைச் செவியில் ஏற்று நுந்தைகுலம் தழைத்துயர்ந்து வள ர்வான் வேண்டி நுண் ணிடை க்குத் திருமண நாள் குறிக்க' என்ருள். 130 பொன்மகளே! ஆண்மகவு பெற்றே னல்லேன் பொற்பதுமை என்ன ஒரு பெண்ணைப் பெற்றேன்: என் மகடகு மணமுடித்தால் நெடுநாள் நெஞ்சில் இருந்துறுத்தும் கலிதிர்க்க அவள்வ யிற்றில் நன்மகவு பலபிறக்கும் என்றி ருந்தேன்; நனவனைத்தும் பகற்கனவாச் செய்து விட்டாள்: மன்னிலத்து மன்னர் பலர் வேண்டி வந்தும் மனங்கொள்ள மறுத்தனளே என்ருன் வேந்தன். 181 கலி-துன்பம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/75&oldid=911587" இலிருந்து மீள்விக்கப்பட்டது