பக்கம்:வீர காவியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 திருமணப் படலம்


இயல் 33 சிறிய மன்னன் சினத்தீ யதனை ஆறிடச் செய்தனள் அறிவுடைத் தோழி. அஞ்சித்தன் மொழிபுகல்வாள் அருள்பொ ழிந்த அரசன்றன் முகக்குறிப்பை நோக்கி நோக்கி, 'வஞ்சிக்குத் தாயில்லாக் குறையே தோன்ரு வண்ணமிது நாள் வரையும் வளர்த்த நீயோ வெஞ்சினத்து மொழிபுகன் ருய்! அவள் தன் வாழ்வை வீணுக்க விழைகின்ருய்! செற்றம் ஒன்றே நெஞ்சகத்துப் புகவிடுவோர் நீதி காணுர்: * நேர்மைக்கும் இடமளியார்; பகையே கொள்வர். 137 உயிராக ஒருவனைத்தன் மனத்தி னுள்ளே உறவாக மதித்திருக்கும் ஒருத்தி யின்பால் அயலானை மணக்கவென எடுத்த ரைத்தால் அவளுடல்தான் மணமேடை வந்து சேரும்; இயமாரும் மனமுரசம் ஆர்த்தல் கேளோம்; இரங்கலொலி ஒன்றன்றி எதுவும் கேளோம்; அயில்வேலோய்: தண்ணளியும் கொண்டுள் ளாய் நீ! ஆய்ந்தொன்று மேற்கோடல் சால்பாம்' என்ருள். 138 இயம்-வாத்தியம் அயில்-கூரிய. தண்ணளி-கருணை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/78&oldid=911594" இலிருந்து மீள்விக்கப்பட்டது