பக்கம்:வீர காவியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 76


'காதலெனின் ஆணைக்குக் கட்டுப் பட்டுக் கருகிவிடும் பொருளன்ரும்; எதிர்த்து வந்து தீததனை நெருங்குமெனில் தளிர்த்து நிற்கும் தெய்வீகத் தன் மையது வாய்ந்த தென்றே ஓதலிலே வல்லவர்கள் உரைப்பர்; அந்த உண்மையினை நீயுணர மறுத்து நிற்பின் சாதலிலே போய்முடியும்; குலம கட்குச் டென்ருள். 139 சாக்காடு தரநினைந்தால் நின்பா நேரிழையே என் மனத்தை உருக்கி விட்டாய்! நெறி தடுமா ருவண்ணம் திருப்பி விட்டாய்! ஆருயிர் போல் வளர்த்தவளைத் தகுதி யில்லா ஆருக்கோ கொடுப்பதெனின் பெற்ற நெஞ்சம் கூரெரியின் மெழுகாகி நையு மன்ருே? குழம்புமெனை என் செய்யக் கூறு கின் ருய்? சீரெதுவோ அதுசெய்ய ஒப்பு கின்றேன்; சிறிய வட்கு மணமுடிந்தாற் போதும்' என் ருன். 140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/79&oldid=911596" இலிருந்து மீள்விக்கப்பட்டது