பக்கம்:வீர காவியம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 திருமணப் படலம்


இயல் 34 வேல்விழி காதலன் வேழன் ருனெனச் சேல்விழித் தோழி செப்பினள் அவற்கே. 'மங்கையர்க்குள் அரசியென விளங்கும் நின்றன் மகளுளத்தைக் கவர்ந்தானுேர் காளை என்ருல் இங்கவனைத் தகுதியிலான் எனநி னைக்க இயலுவதோ? அவளைத்தான் எளிய ளாக எங்ங்ணம்நீ நினைந்தனையோ? மணமே வேண்டா திருந்தமகள் இளவரசி காதல் கொண்டு கொங்கலரும் மலர்த்தொடையல் சூட்டு தற்குக் குறிக்கொண்டாள் எனினதுதான் புதுமை யன்ருே? பேரரசர் அரிதின் முயன் ருலுங் கிட்டாப் பெரும்பேறு நீபெற்ருய்! வேந்த ரெல்லாம் வீரனிவன் பெயர்கேட்பின் நடுங்கி நிற்பர்; வெலற்கரிய வலியுடையான்; களிறு சூழ்ந்து பாரதிரப் போரெதிர்ந்து வரினும் அஞ்சான் பாய்ந்தவற்றைப் பரபரவென் றிழுத்துச் சாய்த்துக் காரதிரும் இடியேறென் ருர்த்து நிற்பான்; கட்டழகும் கட்டுடலும் ஒருங்கே பெற்றன். _ கொங்கு-தேன் J4/ 142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/80&oldid=911600" இருந்து மீள்விக்கப்பட்டது