வீரகாவியம் 78
கற்பாறை பலவுருட்டி, நெடிதின் ஓங்கு
கருமரங்கள் அடிபெயர்த்துச் சீறிப் பாய்ந்து, முற்போகும் கான்விலங்கை எதிர்த்துத் தாக்கி,
முழுவலியும் கெடஇழுத்து, வாகை சூடி நிற்பாரின் பேரொலிபோல் ஆர்த்துச் செல்லும்
நிறைவெள்ளப் போக்குடைய புனலா றென்னும் சொற்பேரால் வழங்கிவரும் ஆற்றின் தென்பால்
சூழ்மதில்சேர் மூவகமே அவன் நா டாகும். 143
அரியனையும் செங்கோலும் மணிவி ளங்கும்
அணிமுடியும் வெண்குடையும் அவனுக் கில்லை; உரிமையுடன் ஆட்சிசெய நாடும் இல்லை;
உண்மைநிலை இதுவெனினும் அவற்றை யெல்லாம் அரசர் தமக் களிப்பதுவும், தற்ப கைத்தால்
அழிப்பதுவும் அவன் கையில் இலங்கும் வாளே! அரியனையான் மாவேழன் என்னும் பேரான்;
அரசருள்ளும் அவன்போல் வார் யாரே உள்ளார்? 144
பெருந்திறலன் அவனுக்கே மாலை சூட்டப்
பெட்புடன் தன் மனத்தகத்தே உறுதி பூண்ட முருந்தனைய நகையுடையாள் பிழையோ செய்தாள்?
மொய்ம்புடையான் அவன் தகுதி இலனே? சொல்வாய்! விருந்தினளுய் நங்கோயில் அகத்து வைகும்
வேழன்றன் உறவுபெற விழையாய் கொல்லோ? திருந்தயில்வேல் மன்னநின துள்ளம் யாதோ? f
தெள்ளிதின் நீ ஆய்ந்தெனக்குச் செப்பு கென்ரு ன். 145