பக்கம்:வீர காவியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 80


என்றிரங்கும் மன்னனுக்குத் தோழி சொல்வாள், "இளவரசி பெறுங்காதல் இரண்டு நெஞ்சும் CAst ஒருமகளாம் வேல்விழியை மனக்கும் நாள்தான் ஒன்றுபடும் ஐத்திணையாய் விளங்கிற் றைய! என்றுவரும் என்றேங்கு கின்ருன் வேழன்; எள்ளளவுங் கவலற்க; இசைவும் தந்தான்; மன்றல்கொள இவ்வனங்கை மறுப்பா ருண்டோ? மாதவங்கள் செய்தவற்கே வாய்க்கும்’ என்ருள். 148 இசைந்தானவ் வெலற்கரிய வீரன் என்ற இனியமொழி கேட்டளவில் அமிழ்தம் ஆர மிசைந்தான்போல் மகிழ்ந்தானவ் வயந்தர் வேந்தன்; மீளியவன் இசைவுபெற முயன்ருர் யாரோ? ஒசிந்தொசிந்து நடைபயிலும் வேல்வி ழிக்கும் ஒள்வேலான் தனக்குமிடை நின்று கூத்து நசைந்தவனம் நடத்தியவள் நீதான் என்று நன்குணர்ந்தேன் நின்மொழியால்' என்ருன் மன்னன். வேல்விழியின் தன் மனமும் இமையா வீரன் வேழன்றன் மனமுமொரு நிலையில் நின்று நூல்வழியே கோத்தனபோல் இணைந்த வென்ருல் நூல்வல்லார் ஊழெனவே நுவல்வர்; ஆளுல் கோல்வழுவாய்! பழி.என்.மேற் சுமத்து கின்ருய்; கூர்ந்துணர்ந்து நோக்குங்கால் பருவக் கூத்தின் மேல்விளைவே ஈதன்றி வேருென் றில்லை; மீறியவர் இயற்கையினே யாரே?' என்ருள். 150 ஐந்தினே-பொருந்திய அன்பு. மன்றல்-மனம் மிசைதல்-உண்னல். மீளி-வீரன். ஒசிந்து-வளேந்து நகைசந்தவனம்-விரும்பியவண்னம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/83&oldid=911606" இலிருந்து மீள்விக்கப்பட்டது