பக்கம்:வீர காவியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 திருமணப் படலம்


இயல் 39 முரசம் ஆர்த்தது முழவொலி கேட்டது அரசன் மகளை அடைந்தனன் வேழன். மணமகளாம் வேல்விழியை அணுகி நின்று மன்னவனல் வுறுதிமொழி கூறக் கேட்டுக் குணமகளாம் அன்னவளும் இசைந்தா ளாகக் கொற்றவனும் மகிழ்ந்தெழுந்து சான்ருேர்ச் சார்ந்து மணவறையை அமைப்பதற்கு நாள்கு றித்தான்; மாநகரம் முழுமைக்கும் முரச றைந்து தனவரிய மகிழ்வூட்டும் செய்தி சொல்லத் தனைச்சூழும் அமைச்சர்க்கும் ஆணை யிட்டான். 159 மாந்தரெலாம் மனமுரசங் கேட்டுத் தங்கள் மக்கள் திரு மனம்போல மகிழ்வு கொண்டார்; வேந்தனுறை அரண்மனையும் மாடஞ் சேரும் வீதிகளும் தாமுறையும் இல்லம் யாவும் ஏ.ந்துமெழில் கொண்டிலங்கத் தோர ணங்கள் எடுத்தார்பூம் பந்தர் பல படைத்தார்; வண்ணச் சாந்துவகை மதிற்பூசி நகர மெல்லாம் சாற்றரிய ஒப்பனையாற் கோலஞ் செய்தார். 160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/88&oldid=911615" இலிருந்து மீள்விக்கப்பட்டது