உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீர காவியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 திருமணப் படலம்


இயல் 40 திருமண மாகிய இருவரும் நிலவிற் +. பெறுபயன் துய்த்துப் பெருமகிழ் வெய்தினர். வந்தயர்ந்த விருந்தினரும் பகலும் ஓய மனங்கண்டு மேற்றிசையில் கதிரோன் சாயச் சந்தனத்துப் பொதியமலைப் பிறந்த தென்றல் தண்மலர்கள் பல நீவி உலவி நிற்கப் பந்துருண்டு வந்ததென மதியம் வானில் படர்ந்துவரும் முகிலுக்குள் தவழ்ந்து செல்ல முந்துமிரு நெஞ்சங்கள் துடித்து நிற்க முதலிரவு வந்ததுவே இன்பம் நல்க! 164 பூமணமும் புகைமணமும் துதைந்து சுற்றும்; புகுமிடங்கள் ஒப்பனையாற் பொலிந்து முற்றும்; தூமலரின் சரங்களெலாம் அசைந்தி ருக்கும்; து வியுடன் பூவிதழும் கலந்தி ருக்கும் காமமுறு பஞ்சனையும் விரித்தி ருக்கும்; கட்டிலொடு கண்ணுடி இணைந்தி ருக்கும்: தாமரைபோல் அமைந்தஒளி விளக்கி ருக்கும்; தண்ணியமென் தென்றல்வர வழியி ருக்கும். 1.65 幫 _ துதைந்து-நெருங்கி, தூவி-அன்னத்தின் மெல்லி 0ঞ্জ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/90&oldid=911621" இலிருந்து மீள்விக்கப்பட்டது