பக்கம்:வீர காவியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 88


பாலிருக்கும், வகைவகையாய்ச் சுவைகள் நல்கும் பழமிருக்கும், பக்கமெலாம் எழிலி ருக்கும்; மேலிருக்கும் கூரையெலாம் வரைந்தி ருக்கும் மேன்மைபெறும் ஓவியங்கள் நிறைந்தி ருக்கும்; சேலிருக்கும் புனலலைகள் நெளிதல் போலத் தென்றலிலே திரைச்சீலை அசைந்தி ருக்கும்; வேலிருக்கும் விழியாளும் வேழன் ருனும் விரிந்திருக்கும் மாளிகையுட் புகுந்தி ருந்தார். 166 புகுந்தவர்தாம் புதுமைமிகும் உலகிற் சென்று புக்கவர்போல் அமர்ந்திருந்தார்; இருவர் நெஞ்சும் தகுந்தகுமென் ருசையினுல் படப டத்துத் தாளமிட உணர்ச்சிகொண்டார்; வடுவின் காயை வகுந்ததெனும் விழியாலே அவன் ந லத்தை வாரியுண்டாள்; அவனுந்தன் விழிம லர்த்தி நகுங்கமல முகத்தாளின் அழகை எல்லாம் நனியுண்டு மயங்கிமனங் களித்தி ருந்தான். 167 கையொன்ருல் சேயிழையின் மென் தோள் பற்றிக் கன்னத்தை மற்ருென்ருல் தொட்டான்; அந்தக் கையொன்ரு முன்னமவள் நாணங் கொண்டு காளையவன் தடந்தோளில் முகம்பு தைத்தாள்; மெய்யொன்றும் பொழுதத்தில் இருவர் தாமும் மேளிைற் கண்டறியா இன்பங் கண்டார்; பொய்யென்ருர் இவ்வாழ்வை அறியா மாந்தர்; புதுமையிது புதுமையிது என்று வந்தார். 168 சேல்-கயல் வடு-மாவடு, வகுந்தது-பிளந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/91&oldid=911623" இலிருந்து மீள்விக்கப்பட்டது