பக்கம்:வீர காவியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 திருமணப் படலம்


காணுத இன்பத்தான் அவள் பாற் கொய்யாக் கனிகொய் தான்; முகஞ்சிவந்து பெண்மை நாணம் பூணுகக் கொண்டவளும் கொழுநன் றன்னைப் பூங்கொடிபோல் தன்னுடலால் தழுவிக் கொண்டாள்; பாணுக வண்டார்க்கும் பொய்கைப் பக்கம் பார்த்தென்பாற் பூங்கொடியை வேண்டி நின்றீர்! நாணுளும் துமைப்பற்றிப் படர்ந்து வாழும் நல்லகொடி யாகிவிட்டேன் கொள்க’ என்ருள். 169 பாலறியார் பழமறியார் ஆல்ை அந்தப் பாற்சுவையும் பழச்சுவையும் நன்கு ணர்ந்தார்; நூலறியார் கவிநுகரப் புகுதல் போல நுழையினும்பின் சொலற்கரிய இன்பங் கண்டார்; வேலறிவான் வாளறிவான் எனினும் இன்று வேலறியாக் களங்கண்டான்; வெற்றி கண்டான்; மாலவள் தன் விழிவேலால் தோற்புங் கண்டான்: வளர்நிலவுப் பயன்முழுதும் வாரி யுண்டான். 170


பாண்-பாடல். நாளுளும்-நாளெல்லாம் மாலவள்- இன்பமயக்க முடையவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/92&oldid=911625" இலிருந்து மீள்விக்கப்பட்டது