பக்கம்:வீர காவியம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 90


இயல் 41 புணர்ந்து திகழ்ந்தோன் பூவையின் தலத்தை உணர்ந்து புகழ்ந்தான் ஒண்டொடி மகிழ்ந்தாள். 'புலனைந்தாற் பெறுமின்பம் அனைத்தும் என்றன் பூங்கொடிபால் நுகர்ந்ததனுள் திளைத்தேன்; நல்ல குலனுவந்த நினைக்கண்டு கொண்ட காதற் கொடுநோய்க்கு நீயே நன் மருந்தாய் நின்ருய்! கலன்சுமந்த மென்தோளில் துயிலும் இன்பம் கண்காணுத் துறக்கத்தை விஞ்சக் கண்டேன்! நலனுகர்ந்து விலகுங்கால் சுடுதல் கண்டேன் நண்ணுங்கால் தண்ணென்னும் விந்தை கண்டேன்! 171 நின்னலனை அறிதோறும் முன்னர் என்பால் நின்றிருந்த அறியாமை கண்டேன்' என்று பொன்னனையாள் புணர்ச்சியில்ை மகிழ்ந்து ரைத்தான்; புரிநகையில் முல்லையுடன் கொவ்வை கண்டேன் dঠা - மின்னுமொளி மேனியினில் தளிரைக் கண்டேன் * மீன்விழியில் குவளைமலர் மிளிரக் கண்டேன் சின்னஒரு மின்னலிடை துவளக் கண்டேன் செய்யமலர் நின் முகத்தில் மலரக் கண்டேன். 172 கலன்-அணிகலன் துறக்கம்-சுவர்க்கம் செய்யமலர் சேநதாமரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/93&oldid=911627" இருந்து மீள்விக்கப்பட்டது