பக்கம்:வீர காவியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 திருமணப் படலம்


முகிலிடையே மலர்முல்லை கண்ட தில்லை மொய்குழலில் அம்முல்லை மலரக் கண்டேன்; துகிலுடைய மாங்கனியைக் கண்ட தில்லை தோள்தொட்ட பின்னரதைக் கண்டு கொண்டேன்; நகையுடைய முல்லைக்கு வரிசை யில்லை நானின்றவ் வரிசைதனை நின் வாய்க் கண்டேன்; புகலரிய இனிமைக்கு வடிவமில்லை பூமகளே நின்னுருவில் அதனைக் கண்டேன். 173 வானத்து முழுமதிதான் நின் மு. கத்து வடிவழகுக் கொப்பாகத் தவங்கி டக்கும்; மீனத்து நடுவிலது மேன்மை பெற்றும் மேற்பொருந்தும் களங்கத்தால் உவமை யாகா மானத்து நல்லுணர்வால் வெட்கி யங்கு மாமுகிலுட் புகுத்தொழிந்து போதல் காண்பாய்! நானத்தும் எழிலுருவப் பாவாய்! நின்றன் நலத்தைஎலாம் எவ்வண்ணம் புகழ்வேன்' என்ருன் 174 உணர்ச்சியினுல் மெய்தழுவி என்றுங் காணு உலகினுக்கு மாவேழன் அழைத்துச் சென்று புணர்ச்சியில்ை அவன் திளைத்து மகிழ்ந்து சைத்த புகழ்மொழிகள் அத்தனையும் மயங்கிக் கேட்டாள்; உணற்குரிய நலமெல்லாம் உண்ட பின்னர் உவந்துதலம் பாராட்டி உரைத்த சொல்லால் துணர்க்கொடியின் மெல்லிடையாள் துவண்டி ருந்தாள் தொல்லுலகைத் தன்னிலையை மறந்தி ருந்தாள். 175 முகில்-மேகம். துகில்-ஆடை. நகை-ஒளி. மீனம்-விண்மீன்கள். நானத்தும்-நான் நத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/94&oldid=911629" இலிருந்து மீள்விக்கப்பட்டது