பக்கம்:வீர காவியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 92


புகழ்மொழிகள் தரும்மயக்கம் வேழன் தந்த புணர்ச்சியினுல் வரும்மயக்கை விஞ்சி நிற்கும்; புகழ்மொழிகள் தந்நலத்தை வெறுத்து விட்ட பொதுநலத்துத் தொண்டரையும் மயக்கு மென் ருல் வகிர்வடுவின் விழிமகளிர் நெஞ்சை மட்டும் வாட்டாமல் வளைக்காமல் விட்டா போகும்? திகழ்மலர்கள் உதிர்ந்திருக்கும் அணையின் மீது திருமகளும் சொக்கியிமை குவித்தி ருந்தாள். 176 ஆண்மைக்கோர் உவமைசொலும் உலக வீரன் ஆணழகன் மாவேழன் என்னும் நம்பி, வாண்மைக்கண் மாதரசி பாரில் இல்லா வடிவழகி வேல்விழியாம் நங்கை, அன்புக் கேண்மைக்கோர் இலக்கியமாய் இல்ல றத்துக் கிழமைக்கோர் இலக்கணமாய் வாழ்ந்து வந்தார்; வேண்மைக்கோர் உறுபயனைக் காதல் வாழ்வின் விளைவுதனைக் கண்டுவக்கும் வாய்ப்பும் பெற்ருர். 177 திருமணப்படலம் முற்றும் வாண்மைக்கண்-வாள் போன்ற மையூசிய கண்கள். வேண்மை-விரும்புத்தன்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/95&oldid=911631" இலிருந்து மீள்விக்கப்பட்டது