பக்கம்:வீர காவியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 96


குளிர்புனலை மலர்முகத்தில் தெளித்தான்; சற்றே குறைவுபட மயக்கொழிந்து தெளிந்தாள், நிள்றன் தளர்நிலையைக் கண்டுள்ளம் நடுங்கி விட்டேன் தளிர்மேனிக் கிந்த நிலை வந்த தென்கொல்? விளரியதுன் முகமென்கொல்?' எனப்ப தைத்து வினவியவற் கொன்றுமிலை என்று சொல்லி, முளரிமுகம் ஒருசிறிது கவிழ்த்து, நாணி, முறுவலித்து, வேல்விழியாள் அகன்ருள் ஆங்கே. 180 காய்ச்சியநல் லாவின் பால் கொண்டு வந்து கைக்கொடுத்தாள் உயிர்த்தோழி; பாலை வாங்கி வாய்ச்சிறிது வார்த்தவுடன் கடிந்து கொண்டாள்; வாழ்கின்ருர் காதலர்தாம் எனது நெஞ்சுள், போய்ச்சுடுமென் றறியாயோ? விஞ்சும் சூடு போகாமல் கொணர்ந்தனையே! போபோ என்று வேய்ச்சிறுமென் தோளுடையாள் சினந்தாள் ஓர் நாள்; வேறறிய வொண்ணுமல் ஒன்றி நின்ருள். 181 முளி - தாமரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/99&oldid=911642" இலிருந்து மீள்விக்கப்பட்டது