பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 103 பிரார்த்தனேக் கூடமாக இருந்த இடம், பிணக் காடாக மாறுகிறது. பத்தே நிமிஷத்தில் நானூறு உயிர்கள் போகின்றன. சுமார் இரண் டாயிரம் பேருக்கு கால் கைகள், தலைகளில் குண்டுக்காயம் ஏற்படுகிறது. ராணுவ ஜெனரல் சிரிக்கிருன். பின்னணியில் வெடியைவிடப் பெரியதாகச் சிரிக்கிருன்-இரத்தக்காட்டேரி யான ஜெனரல் டயர்! டயர் : ஆ...கா...கா... சுட்டேன் இந்தியக் கருப்பு நாய்களை; வெடி மருந்து இருந்தவரை சுட்டுப் பொசுக்கினேன். இருந்திருந்தால் இன்னும் சுட்டிருப் பேன். (இந்தக் கோரக் காட்சியைத் தொடர்ந்து மற்ருெரு மோசமான நிழற்காட்சியில் மனிதர்கள் நடுத் தெருவில் நான்கு கால் மிருகங்கள் போல் ஊர்ந்து செல்லும்படிச் செய்யப்படுகிருர்கன் டயர் (நிழலில்): இந்திய காய்கள். நாலு கால்லேதான் கடக்கணும். தலை தூக்கினிங்க: சுட்டுபுடுவேன்! (ஒருவன் எழுந்திருக்கிருன். உடனே சுடுகிருன்) பின்னணி : 1919-ல் பஞ்சாப் மாநிலத்தில்-குஜரன்வாலா பாக்கில் கடந்த அவலச் சம்பவம் இது. நாயினும் கேவலமாக நம் மக்களை நடத்தினது அந்நியனின் ஆதிக்க வெறி அடக்குமுறை. இந்தப் பாதகன் டயர் செய்த இந்தப் படுகொலைக்கு, இந்திய அரசாங்கம் வைரம் பதித்த வாள் ஒன்றைப் பரி சாகத் தருகிறது. அதுவும் பொது மக்கள் தந்த தாகப் பொய் கூறிப் பரிசளிக்கிறது) காட்சி முடிவு