பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 1.2 காலம் : 1928. தேதி : லாகூர் சாலை. கிகழ்ச்சி : போலீஸ் ஆலோசனை. பாத்திரங்கள் : ஆங்கில போலீஸ் அதிகாரி டிப்டி சூப்ரிண் டண்ட் சாண்டர்ஸ்ாம் அவனது நண்பர்களும். ஸாண்டர்ஸ் , எச்சரிக்கை. 1919-ல் ஜெனரல் டயர் இருந்தார். இது 1928. இப்போது ஒரு டயர் உருவத் தில் இந்த ஸாண்டர்ஸ் இருப்பதாகச் சொல். எல்லாம் ஒழுங்காக கடக்கட்டும். ஒருவன் : துரை, தடையை மீறப் போருங்களாம்! ஸாண்டர்ஸ் தடையை மீறும் அந்த இரும்பு மனிதன் யார்? ஒருவன் : பாஞ்சால சிங்கம், ஸாண்டர்ஸ் : சிங்கமாவது சிங்கம்: சுத்த அசிங்கம். கிழட்டுப் பூனே, பைத்தியக்காரன், இந்த லஜபதி ராயை இந்தியாவுக்குள் வரவிட்டதே தவறு. போலீசுக்கு இந்த ஆள் ஒரு பெரிய தலைவலி, மற்றவன் : ஆமாங்க துரை. லாலாஜி என்று சொன்ன கடவுள் மாதிரி கும்பிடுருங்க இந்த ஜனங்க.