பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 9 வாழத் தகுதியற்றவர்கள். ஏதோ தேர்தல் கோமாளி களிடம் இந்த நாட்டின் உரிமையை அடகு வைத்து விட்டோ, அல்லது தேர்தல் சமயத்தில் ஒட்டுரிமையை ஈனவிலக்கும் போன விலக்கும் விற்று விட்டோ, குடி கேடர்களாய், அடியார்க்கு அடியர்களாய், வாழ முடியும் என நினைக்கிருர்களே! இது நியாயமா? இந்த அபாயகர மான கிலேயில் ஏதோ சில நாள் சுகம் அனுபவிக்கலாம்: துரங்கலாம். தாக்கம் கலந்து எழுந்ததும் தாங்கள் செய்த தவறுகள் புரிகின்றன: மனச்சான்று விசுவரூபம் எடுத்து அவர்களை வதைக்கிறது! அந்த மனச்சான்றை மீண்டும் அடக்கி வைக்க மேலும் அரசியல் போதைகள்' அறிவற்ற கோணற் செயல்கள். இத்தியாதி...இத்தி யாதி...இதெற்கெல்லாம் காரணம் என்ன? முன்னே கம் அன்னை காட்டில் மூண்டிருந்த பெருமையறியாத மூடத் தனந்தான். விடுதலை வந்து முப்பது ஆண்டுகளில்: கமது முந்தையரின் வீரத்தை அவர்கள் ஆற்றிய தியாக வரலாற்றை, இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க மறந்தேவிட்டோம்! இல்லை. மறுத்துவிட்டோம்! நாம் அனுபவிக்க விரும்பிய சில கீழான விளம்பரத்திற்காக, கமது முன்னுேரின் மேலான பெருமையை இரும்புத்திரை போட்டு மறைத்துவிட்டோம். கம்மை மட்டும், பெரிது படுத்தி மக்களுக்கிடையே ஊர்வலம் வந்தோம், தேர்வல மும் வந்தோம். தேர்தல் வரங்களையும் பெற்ருேம். புதிய வால் கட்சத்திரங்களின் புகழ் மேகத்தில், பழைய சூரியனும் சந்திரனும் சற்று மறைவதுபோல் கமது முன்னுேடிகளான தியாக வீரர்களது வரலாற்றை திரைக்குப்பின் மூடி மறைத்தார்கள். மக்களின் மற தியை தங்களது பதவிப் பித்தலாட்டத்திற்கு மூலதன மாக்கிக் கொண்டு, புதுப்புது மேடைகளில் போலி நாடகம் போட்டார்கள். சில புதுப் புத்திசாலிகள்!