பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வீர சுதந்திரம் சுகதேவ் : வெகு சீக்கிரம் மற்ருெரு பஞ்சாப் படுகொலை தான் கடந்தே தீரும். பகத்சிங் . பஞ்சாப் படுகொலை மற்ருெரு பஞ்சாப் படு கொலே. கடக்காது; கடக்காது...சுகதேவ்! கடக்க விடக் கூடாது! அப்படி கடந்தால்? சுகதேவ் : கடந்தால் என்ன செய்துவிட முடியும்? 1919-ல் அன்று கடந்ததே ஆயிரமாயிரம் மக்களைச் சுட்டெரித்த போது சிட்டுக் குருவிகள்போல் சுருண்டு விழுந்தார்களே! அப்போது என்ன செய்து விட்டோம்? மக்களே மிருகங்கள் ஆக்கினன், பெண் களே மானபங்கப்படுத்தினுன், அன்று என்ன செய்து விட்டது இந்த காடு? பகத்சிங் : அன்று நடந்திருக்கலாம் அப்போது இந்த பகத்சிங் இல்லை. சுகதேவ் இல்லை; ராஜகுரு இல்லை நமது கவஜவான் இயக்கமும் இல்லை, இந்திய சோஷலிஸ்ட் புரட்சி ஸ்தாபனம் இல்லை. அன்று நாம் பச்சிளம் பாலகர்கள்! இன்று காம் அரும்பு மீசை யுள்ள ஆண்பிள்ளைகள். பழி வாங்கத் துடிக் கும் பயங்கர மனிதர்கள். விடுதலைப் போரின் வேங் கைப் படைகள்! அன்று காமில்லை-சுட்டு விட்டான்! இன்று காம் இருக்கிருேம். இரானுவ ஆட்சி அடங்கியிருக்கிறது. துப்பாக்கிக் குண்டுக்குப் பயந்து-போலீஸ் முடங்கிக் கிடக்கிறது. சுகதேவ் : பகத்சிங். கம்மைப் பார்த்துத்தான் சில பெரிய மனிதர்கள் சொல்லுகிருர்கள் பயங்கர வாதிகள் என்று.