பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் iii சுகதேவ் : என்ன? உன் விழிக்கா வழி தெரியலே. நீ முழிக்கிற முழியைப் பார்த்தா புது உலகத்துக்கே வழிகாட்டுவே போல இருக்கு. வசந்தி : ஒய். என்னய்யா இது வீரபுரிக்கு வழி தெரியு மான்னு கேட்டா, ஏதோ பிரசங்கம் பண்றே. சுகதேவ் . வீரபுரிக்கு வழியா? தெரிய2லயே! வசந்தி : என்னய்யா ஆம்பிளே நீர். வீரபுரிக்கு வழி தெரியாத சுத்த கோழை மனுஷனு இருக்கே! சுகதேவ் . அதுவா ரொம்ப துரம் இருக்கும். இருட்டிப் போச்சே. கல்லா விசாரிச்சுகிடடு நாளைககுப் போக லாமே. வசந்தி : அதெல்லாம் சோம்பேறிங்க வேலை. காங்க ளெல்லாம் இன்னிக்குச் செ ய் ய வேண்டியதை இன்னிக்கேதான் செய்வோம். (அவள் போகிருள். அவன் அவளேப் பின்தொடர்கிருன். அவள் நின்று முறைத்துப் பார்க்கிருள்) சுகதேவ் . இதோ பார். நீ என்னை மீறி இனிப் போக முடியாது. வசக்தி (மறு படியும் முறைத்துப் பார்த்து) அடடே. அது யாா? (சுகதேவ் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்த மறுகணமே வசந்தி தான் மறைத்து வைத்திருந்த ரிவால்வரை எடுத்து) டேய் ஹேண்ட்ஸ் அப்.