பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி: 17 காலம் : 1928. இடம் : லாலா லஜபதிராயின் வீடு. நிகழ்ச்சி : உயிர் பிரிந்த லாலா லஜபதிராயின் முன்னல் பகத்சிங்கும் மற்றவர்களும் மரியாதை செலுத்தி விட்டு. வீரச் சபதமிடுதல்பாத்திரங்கள் : லாலா லஜபதிராய், பகத்சிங், மற்றும் தேச பக்தர்கள். (உயிர் பிரிந்த லாலா லஜபதிராயின் உடல் தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒரே கதறல்! பலர் மலர்மாலை போட்டு மரியாதை செய்கிரு.ர்கள். அச்சமயம் பகத்சிங் வருகிருன்..! ஒருவன் : (அழுகிருன்) பகத்சிங் பகத்சிங். மற்றெருவன் : பகத்சிங். பாஞ்சால சிங்கம் மடிந்து விட்டது தம்பி. வேருெருவன் : பகத்சிங், பாரதத்தின் பீஷ்மர் போய் விட்டார்! நம்மை விட்டுப் போய்விட்டாா! ஒருவன் : தேசபக்தியின் சுடரொளி அணைந்துவிட்டது மற்றெருவன் : ராட்சசன் சா ண் டர் ஸ். தடியால் அடித்தே இவரைக் கொன்றுவிட்டான். ஒருவன் : பகத்சிங்.