பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 18.பி இடம் : லாகூர் சிறையின் ஒருபகுதி. (கூண்டுக்குள் விலங்கு பூட்டப்பட்டு புலிபோல் சிறிக் குமுறி நிற்கும் பகத்சிங்கிடம்) வார்டன் : (உண்ணுவிரதம் இருக்கும் பகத்சிங்,ராஜகுரு சுகதேவிடம்) உங்க கால்லே விழுந்து கேட்டுக் கறேன். தம்பி. நான் புள்ளைக் குட்டிக்காரன். ஏழு காளா நீங்க படற வேதனையை பார்க்க முடியலிங் கய்யா! தம்பி. எனக்காகவாவது உங்க உண்ணு விரதத்தை தள்ளி வைக்கக் கூடாதுங்களா? உங்களுக்கு என்னங்க தலைவிதி. இப்படி குலை பட்டினி கிடக்கணும்னு பெரிய விட்டுப்பிள்ளைங்க! எதுக்குங்க இப்படிப் பட்டினியிலே குடலை காயப் போடறிங்க? பகத்சிங் : பட்டினி, தாகம், பசி, வேதனை எல்லாம் எங்களுக்காக அல்ல-அய்யா.எங்களுக்காக அல்ல. பட்டினிகிடக்கும் நம் காட்டுக்காக, நாங்கள் பட்டினி கிடக்கிருேம். தவிக்கும் தாய் காட்டுக்காக, நாங்கள் தாகத்தால் தவிக்கிருேம். இந்த தாகம் சுதந்திர தாகம். காங்கள் படும் வேதனை இந்த நாட்டின் பிரதி பலிப்பு இதோ என் நரம்பு நாடி எல்லாம் கடுங்கு கிறதே இப்படித்தான், இந்திய காட்டின் ஏழைப்பாட் டாளி கடுங்குகிருன். பாலுக்குப் பிள்ளை அழும்; பட்டினியால் தாய் அழுவாள். வேலையின்றி ஆள் அழுவான்; வீடுமுச்