பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வீர சுதந்திரம் டாம்...! தாகம் தீரத் தண்ணிர்தான் வேண்டும். தண்ணிர் கொடுக்கப் போகிருயா? இல்லையா? I want water? (கர்ஜிக்கிருர்கள் மூவரும்) ஜெயிலர் : இதைச் சாப்பிட்டு உண்ணுவிரதத்தை நிறுத் தினுல்தான் தண்ணிர் தருவேன். பகத்சிங் : தண்ணிர் கொடுக்கமாட்டாய்? ஜெயிலர் : முடியாது. பகத்சிங் : முடியாது...இதைச் சாப்பிட வைத்து எங்கள் உண்ணுவிரதம் முறிந்தது என்ற பெருமையை நீ அடையப் பார்க்கிருய், முடியாது. எங்கள் உயிரே போனலும் உங்களுக்குப் பணிய மாட்டேன். you cannot break our pledge. Shake our Willpower! (பால் ஜாடியை அவன்மேல் போட்டு உடைக்கிருன்) ஆ ஹாஹா...பால்...பால். அல்ல இது எங்களுக் காக ஐம்பது நாள் பட்டினித் தவம் கிடக்கும் ஐதீன் தாஸின் இரத்தம், அரசியற்கைதிகளின் மரியாதைக் காக உயிர் துடித்துக் கொண்டிருக்கும், ஜதின் தாஸ்-க்கு காங்கள் துரோகம் செய்ய மாட்டோம். துடிக்கும் அந்த ஆத்மாவுக்கு துரோகம் செய்ய மாட்டோம். உம்: கொண்டு வா தண்ணிர். டாக்டர் : (வந்து) ஜெயிலர்! நிலைமை மோசம். உடனே தண்ணிர் கொடுக்கலேன்ன. இவங்க உயிருக்கு ஆபத்து, உம் வார்டன்! போ! தண்ணிர் கொண்டு வா. ஜெயிலர் அனுமதி கொடுங்க! உம்!