பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வீர சுதந்திரம் யில் மலரும், சிகப்பு ரோஜாக்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. நினைவிருக்கட்டும்! நீங்கள் அனுபவிக்கும் போகங்கள் யாவும் ஏழையின் தியாகத்தால் வந்த யோகங்கள்! எண்ணற்ற தியாகிகளது எலும்புக் கூடுகளில் கட் டப்பட்டவைதான் சுதந்திர நாட்டின்-ஜனதிபதி-கவர் னர்களின் மாளிகைச் சுவர்கள், சட்டசபைகளின் கட்டி டங்கள், என்பதை ஜனதிபதிகளே கவர்னர்களே! மக் திரிகளே! எம்.பி.க்களே எம்.எல்.ஏ க்களே மறந்து விடா தீர்கள் மறந்தால் உம்மை உலகம் மறந்துவிடும் தோழர் களே மறந்துவிடும். தயவுசெய்து மறக்கப்படும் பொருள் களாகி விடாதீர்கள். வரலாற்றை மறவாமல் இருட்டடிப்புச் செய்யாமல், உருப்படியாக மக்கள் மனக்கோயி லில் என்றும் வீற்றிருக்கும் பெருமையைப் பெறுங்கள். ஜனுதிபதிகள் கவர்னர்களின் மாளிகைகளில் சுதந்திர விழா குடியரசு விழா இன்னும் என்னென்னவோ ஆடம் பர விருந்து விழாக்கள் எல்லாம் நடைபெறுகின்றனவே! அந்த திருவிழாக்களில் ஒரு நாளேனும் நமக்காக உயிர் விட்ட தியாகிகளின் திருவுருவங்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதுண்டா? ஏன்? வைக்கப் பயப்படுகிருர்களா? அல்லது மறந்து விடுகிருர்களா? வைத்தால் கமது வரலாறு புதிய வலிமை பெற்றுவிடும் என்று கூச்சப்படுகிருர்களா? பயப்படுகிருர்களா? இல்லை! கேட்க காதியில்லே என்ற அகம்பாவமா? இந்த நாடகத்தைக் கண்டு இத்தகைய உயிர்த் துடிப்பை நாம் ஒவ்வொருவரும் பெறவேண்டும். அந்த இதயத் துடிப்பிலே, ஒரு புதிய கடமையுணர்ச்சி உதயமாக வேண்டும். அதுவே கமது பிரார்த்தனே! இந்த இலட்சிய வேகத்தின் உயிர்த்துடிப்பே இதில் வரும் காட்சிகள் காணுங்கள். கருத்தினை எழுதுங்கள்.