பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 143 வக்கீல் : அடைவிடக் கொடுமையானதப்பா உன் வார்த்தைகள். ஆண்டவா! பகத்சிங் : அழுகை அர்த்தமற்றது. தைரியமாயிருங் கள். மனிதன் என்ன அழியாத பிறவியா? ஏதேதோ காரணத்தில் சாகிருன். நோய் வந்து சாகிருன்-மன முடைந்து மடிகிருன்-பயந்து சாகிருன்-பயப் படாமலும் சாகிருன்-பெண் என்று சாகிருன்; பேய் என்று மடிகிருன். நாங்கள் அப்படியெல்லாம் சாக வில்லையே. சாவு என்ற பயத்தையே சாகடிக்கும் ஒரு மகத்தான லட்சிய மேடையில் உடற் சுமை யைக் குறைத்து-உலகத்தின் உண்மைகளாக விளங்கப் போகிருேம். அந்த ஒரு மகத்தான மெய் மையை நிலைகாட்ட-பொய்யான இந்த உடலைக் காணிக்கையாகக் கேட்கிறது காலத்தின வேகம்: காங்களும் காணிக்கையைத் தரப் பலிபீடத்தில் இறங்கிவிட்டோம். அழாதிர்கள். வக்கீல் : கடவுளே! சுகதேவ் : அய்யா யாரை வேண்டுமானுலும் கூப்பிடுங் கள். பாவம் அந்தக் கடவுளைமட்டும் அழைத்து விடாதீர்கள். அப்படி ஒன்றுஇருந்தால் அதற்காவது கிம்மதி கிடைக்கட்டும். இதெல்லாம் கடவுள் செயல் அல்ல; காங்கள் மடிய வேண்டும். எங்கள் மரணத் தால் இந்த நாட்டின் சுதந்திர உணர்ச்சி கெருப்புப் போல் பற்றி எரிய வேண்டும். அந்த நெருப்புக்குரிய நெய்யாக வேண்டும் எங்கள் மெய்யான செயல் நாங் கள் நினைத்தால் அன்றே விடுதலை பெற்றிருக்கலாம். மன்னிப்பு எழுதிக் கொடுத்திருக்கலாம். அதற்குரிய பரிசும் பதவியும் கிடைத்திருக்கும் சில துரோகிகள்