பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வீர சுதந்திரம் பலவீனத்தால் பதவி பல பெற்றிருக்கிறர்கள், அந்த துரோகிகளைப்போல ஆத்மசாந்திபெறவோ, அல்லது ஆலய விக்ரகங்களாகவோ நாங்கள் விரும்பவில்லை. சிங்காசனமேறவோ அன்றிச்சிலைகள் ஆகவோ நாங்கள் எண்ணவில்லை. பதவிக்காகவோ அல்லது பட்டத்துக்காகவோ காங்கள் பாடுபடவில்லை. இந்த காட்டின் உணர்ச்சி உறங்கிவிட்டது. அதை உறக் கத்திலிருந்து எழுப்ப காங்கள் திருப்பள்ளி எழுச்சி பாடினுேம். யார் காதிலும் விழவில்லை. மலர் துரவிப் பாாத்தோம்; அதன்வாசனையை நுகரும் சக்தியில்லை, வெடிகுண்டை எறிந்தோம். விழித்தது பாரதம், பார்த்தது உலகை காங்கள் பைத்தியக்காரர்களல்ல. பயனின்றி வீனக மடிவதாக எணை வேண்டாம். இனி வெள்ளைக்காரன் இந்தியனைச் சுடுவதாளுல் ஒருமுறையல்ல-பலமுறை சிந்திப்பான். எடுத்தேன் துப்பாக்கியை சுட்டேன் இந்தியநாய்களை; என்று இனியொருமுறை சொல்ல மாட்டான். என் அருமை நண்பன் யதீந்திரதாஸ் 63 நாட்கள் உண்ணுவிரதம் இருந்து அணு அணுவாக மடிந்து செத்தான்; எதற்காக சிறையிலுள்ள அரசியல் கைதிகள் கன் ருக கடத்தப்பட வேண்டுமென்று தன்னுயிரையே பலியிட்டான்! பாரத நாட்டின் சிறையும் கைதிகளும் இருக்கும்வரை யதீந்திரதாசின் பேரும் புகழும்.நீடித்து இருக்கும். போனமாதம் அலகாபாத் பார்க்கில்பறவை போல் சுடப்பட்டு மாண்டு போனுன்ே சந்திர சேகர ஆசாத் -எங்களில் மூத்தவன், அவன் வீரத்தின் இமயம். ஆ...அந்த மாவீரனும் மாண்டு விட்டான்! இவர்களைப் பின்பற்றி நிற்கும் எங்களால் -சுதந்திரத்தின் பாதை செப்பனிடப் பட்டுள்ளது. சீக்கிரமே நீங்கள் காணப்ப்ோகும் சுதந்திர மாளிகை