பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 20 காலம் : மாலை. இடம் : கொடும் சிறையில் மற்ருெரு பகுதி. நிகழ்ச்சி : ஜெயில் வார்டன் ராஜகுருவிடம் சிபார்சுக் கடிதம் பெறுதல் பாத்திரங்கள் : ராஜகுரு, பகத்சிங், சுகதேவ், வார்டன் ஜகத்சிங். - பார்டன் : உங்களை எப்படியப்பா பிரிஞ்சி இருப்பேன். ரெண்டு வருஷமா - குழந்தைகள் மாதிரி இருந்த உங்களோடு பழகினேன். நாளையிலிருந்து உங்களைப் பார்க்க முடியாது! அய்யா. பார்க்க முடியாது! ாஜகுரு : ஒய், துாக்கிலே சாகறத்துக்கு துக்கப்பட வேண்டியது காங்கய்யா. நீ ஏன் இப்படி அழறே? ஆறிலும் சாவு நூறிலும் சாவு இதற்கு ஏனய்யா அழுகை? ார்டன் : என்னமோ தம்பி, மனசு கேக்கல்லே. நானும் பத்துக் குழந்தைகளைப் பெத்தவன், அதிலே ஒரு குருட்டுப் பொண்ணு, காலராவிலே செத்துப்போச்சு அந்த சோகத்தையே சகிக்க முடியல்லேப்பா. ராஜ சிங்கம் போல இருக்கிற உங்களை எப்படி அய்யா துக்கிலே போட, இந்தப் பாவிகளுக்கு மனசு வந்தது? அதை எப்படி அய்யா சகிக்கிறது? ாஜகுரு : ஒய், ஜகத்சிங் நீர் உண்மையிலேதான் வருத்தப்படlரா?