பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 153 சுகதேவ் : கடைசி விருப்பம். நன்ருகக் கேட்டுக்கொள்! பாரதகாடு பரிபூரண சுதந்திரம் அடைய வேண்டும் ஆண்டு பலவாக செத்துக் கொண்டிருக்கும் நமது மக்கள் புதுவாழ்வு பெற வேண்டும்; ஏழையென்றும் அடிமையென்றும் இழிவுபட்ட இன்றைய சமுதாயம் வீரமிக்க வெற்றி பெற்று வாழ வேண்டும். பிச்சைக் காரர்களற்ற, கொச்சைக் கோழைகளற்ற-பொது வுடைமைச்சமுதாயம் அமைதல் வேண்டும். ராஜகுரு : அதுமட்டுமல்ல. காங்கள் துாக்கில் மடிவது எவ்வளவுகிச்சயமோ-அவ்வளவு நிச்சயம் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிலிருந்து மறையப் போவது. பகத்சிங் : அதைவிட ஆயிரம் மடங்கு நிச்சயம் கமது பாரத காட்டின் சுதந்திரம். வரப் போகும் அந்த வீர சுதந்திரத்தை, தேசத் துரோகிகளும் ஐந்தாம் படை களும் ஒழித்துவிடாமல் பார்த்துக்கொள்வது வருங் கால வாலிபர்களின் கடமை. ஆம் அருமைச் சுதந்திரத்தைச் பதவி வெறியர்களும் சந்தர்ப்பவாதி களும் அழித்து விடாமல் என்றும் காப்பாற்ற வேண்டியது இந்த காட்டின் கடமை, இதுவே எமது இறுதி ஆசை. இதைப் போய் எமது பாரத நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள். வாழ்க புது உலகம்! புரட்சி வாழ்க! வந்தேமாதரம். (மூவரும் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு மாலைபோல் மாட்டிக் கொள்கிருர்கள்: ஒருவன் கருப்புக்கர்ச் சிப்பை ஆட்டுகிருன். பலகைத் தட்டிவிடப் படுகிறது) காட்சி முடிவு