பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி ; 22 காலம் : 1932 ஜனவரி மாதம் 10-ந் தேதி இடம் : சாலை நிகழ்ச்சி : திருப்பூர் குமரனுடன் விடுதலை வீரர்கள் பேசுதல் பாத்திரங்கள் : பி எஸ். சுந்தரம், ராமன்நாயர், குமரன் மற்றவர்கள். தண்டோரா : ஐாக்கிரதை 144-வது செக்ஷன் அமுலில் இருக்கிறது. தெருவில் காலு பேருக்குமேல் கூடி நிற்பதோ-பேசுவதோ சட் ட விரோதம். தடை யுத்தரவு அமுலில் இருக்கிறது. வந்தேமாதரம் என்று கொடி எடுத்தால் போலீஸ் சுடும்-சுடும்சுடும். (வந்தேமாதரம் என்போம் என்ற பாடல் பாடி, மூவர்ண ராட்டைக் கொடிஏந்தி தொண்டர் கள் உள்ளிருந்து வருகிருர்கள். விடுதலை வீரர் களின் மத்தியில் சுந்தரம், ராமன் போன்ருேர் மேடையில் நிற்கின்றனர்) சுந்தரம் : நண்பர்களே! சகோதரர்களே! நாம் ஏந்தி நிற்பது சத்தியம், அன்பு, அகிம்சை, தியாகம், சுபிட்சம், சமாதானம் இவைகளைச் சின்னமாகக் கொண்ட மூவர்ணக்கொடி. இவ்வளவு பண்பினையும் ம ணி த அபிமானத்தையும் உழைப்பால்தான் மனிதன் பெறமுடியும் என்பதை எடுத்துக்காட்ட உழைப்பின் சின்னமாக கைராட்டையையும் மத்தியில் பொ றி த்துள்ளோம். பெரியோர்களே!